Posts

புதுப்பிக்கத்தக்க சக்தி (Renewable Energy)

Image
சக்தி  என்பது வேலை செய்வதற்கான கொள்திறனைக் கொண்டிருக்கும் ஒரு முறைமை ஆகும். மறுபுறத்தில் குறிப்பிட்ட சக்தி அளவு என்று குறிப்பிடும் பொழுது, அது காரியங்களை நிகழச்செய்வதற்கான கொள்திறனையே காட்டுகின்றது. அந்த முறைமை சமுத்திரங்களுக்கு ஊடாக நூற்றுக்கணக்கான பயணிகளை எடுத்துச்செல்லும் ஒரு ஜெட் விமானமாக, எலும்பு செல்கள் வளரும் ஒரு மனித உடலாக அல்லது காற்றில் எழுந்து செல்லும் ஒரு பட்டமாக இருக்க முடியும். நகர்த்துவதில் அல்லது வளரச் செய்வதில் இந்த ஒவ்வொரு முறைமையும் வேலை செய்வதுடன், சக்தியையும் பயன்படுத்திக் கொள்கின்றது. ஒன்றில் அதனை உருவாக்கிக் கொள்ளவோ அல்லது அழிக்கவோ முடியாது, ஆனால், ஒருவகையிலிருந்து மற்றொருவகைக்கு அதனை மாற்றியமைக்க மாத்திரமே முடியும். சூரிய ஒளி, காற்று, அலைகள், பேரலைகள் மற்றும் புவி அனல் சூடு போன்ற மானிட கால அளவின் அடிப்படையில் இயல்பாகவே மீளாக்கப்படும் வளங்களினால் உருவாக்கப்படும் சக்தி  புதுப்பிக்கத்தக்க சக்தி  என அழைக்கப்படுகின்றது. அது பல்வேறு வடிவங்களில் இருக்க முடியும். உதாரணமாக சூரியனிலிருந்து நேரடியாக அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்; அல்லது பூமியின் அடியாழத்தில் உருவாக்கப்படும

பேண்தகு அபிவிருத்தி (Sustainability Development)

Image
பேண்தகு அபிவிருத்தி குறிக்கோள்களில்17 குறிக்கோள்களும்(Goals) அதனுடன் தொடர்புடைய சுமார் 169 இலக்குகளும் (Targets) உள்ளடங்குகின்றன. இவை பேண்தகு அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன. இந்த இலக்குகள் 2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதுடன், அவற்றை வெற்றிபெறுவதற்கான இறுதி இலக்கு 2030 ஆம் வருடமாகும். இது 15 வருட காலப்பகுதியைக் கொண்டதாகும். பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின் முக்கிய அம்சம் அவை உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்புடையதாக இருப்பதாகும். (புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்கு பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு உரித்தானவையாகும்) அவ்வாறே அபிவிருத்திக்காக அதிக துறைகளையும் அதிக இலக்குகளையும் கொண்டிருப்பது பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின் முக்கிய அபிவிருத்தியாகும். இதுவரை கலந்துரையாடப்படாத பெண்களை வலுவூட்டல் ,சமாதானமும் பாதுகாப்பும் மற்றும் நல்லாட்சி போன்ற எண்ணக்கருக்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். எதிர்கால உலகின் அபிவிருத்தித் திட்டங்கள் இப்புதிய இலக்குகளின் அடிப்படையில் அமைந்தவையாக இருக்கும். எதிர்காலத்தி

பூகோளமயமாக்கம் (Globalization)

Image
அறிமுகம் பூகோளமயமாக்கம் ( Globalizion)  என்னும் பதமானது அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, பண்பாட்டம்சங்களில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன. பூகோளமயமாக்கம் என்ற எண்ணக்கருவானது எப்போது தோற்றம் பெற்றது என்பது தொடர்பாக வேறுபட்ட கருத்துகள் வேறுபட்ட பிரிவினர்களிடம் காணப்படுகின்றன. பூகோளமயமாக்கம் என்ற எண்ணக்கரு கல்வித் துறைக்கான புதிய வரவு என்ற மனப்பதிவு தவறானதாகும். புராதன, மத்திய காலங்களில் வர்த்தகத்திற்காகவும், சமயம், கலாசாரம், ஆகியவற்றை பரப்புவதற்காகவும், உலகம் முழுவதும் பரந்து சென்றார்கள். உதாரணமாக இந்தியப் பொருட்கள் பிரித்தானிய சந்தையிலும், சீனப் பொருட்கள் இந்தியாவிலும்; விற்கப்பட்டன. பிரித்தானிய மற்றும் அராபிய கலாசாரம் இந்தியாவிலும் பரப்பப்பட்டன. பின்னர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் இது பூகோளமயமாதல் செயற்பாடாக மாற்றமடைந்தது. பூகோளமயமாக்கத்தின்   தோற்றம் பூகோளமயமாக்கத்தின் தோற்றம் தொடர்பாக வேறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் பூகோளமயமாக்கத்தின் தோற்றத்தினை பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் சிலர் தொடர்புபடுத்துகின்றார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இது தோற்றம